Tuesday, October 5, 2010

சுமைதாங்கி







நரைத்த தலையில்
பழுத்த நினைவுகள்

பணிந்த உடலில்

பற்றிநிற்கும் ஊன்றுகோல்

சுருங்கிவிட்ட தசைகள்

தொலைந்துபோன பார்வை

தளர்ந்த குரல்

தள்ளாடும் நடை

சின்னக்குழந்தை போல

பேரக்குழந்தைகளுடன்

கொஞ்சிவிளையாடும்

சுமைதாங்கிகள் ஒவ்வொரு
குடும்பத்திலும்,

நலம்பேனவேண்டும்

அவர்கள் மனம்நோகவேண்டாம்

நாளைய சுமைதாங்கி நாம்

என மனதில் நிறுத்தினால்

முதியோர் இல்லம்

இல்லாமை செய்யலாம்

1 comment:

  1. //நாளைய சுமைதாங்கி நாம்
    என மனதில் நிறுத்தினால் //

    எல்லாமே சரியாகிவிடும்..

    கவிதை நல்லா இருக்குங்க:)

    ReplyDelete