Tuesday, October 25, 2011

அன்புள்ள மகனுக்கு

அன்புள்ள மகனுக்கு
உன் அம்மா எழுதுவது

சந்தை - ல் விற்ற மாடு கூட

வீடு வந்து சேர்ந்து விட்டது
பழகிய பாசத்திற்காக

காணமல் போன நாய் கூட

வந்து விட்டது என்னை தேடி

நான் பெற்ற மகனே


இவரிற்கு உணவு மட்டும் தானடா கொடுத்தேன் ..


உனக்கு என் ரத்தத்தை பாசத்தோடு கொடுதேனடா


நீ எபோது வருவாய்

என்னை கூட்டி செல்ல ...

இப்படிக்கு

முதியோர் இல்லத்திலிருந்து
உன் அம்மா

காலமே பதில் சொல்

காலமே வாழ்க்கையை
தீர்மானிக்கும் திசைகள் ..
இறந்தகலத்தில் நிகழ்ந்தவை
ஞாபகத்தில் இல்லை..
நிகழ்காலத்தில் நடப்பவை
எதுவுமே புரிவதில்லை ...
எதிர்காலத்தில் நடப்பவை
கண்ணில் தெரிவதில்லை ..
நேரம் யாருக்கும்
புரியாத புதிர் ..
வாழ்க்கை என்ற
கடிகாரம் நம்மிடம் .
இதில் சுற்றி கொண்டிருக்கும்
முட்களாக நாம் ...

கொண்டாடித்தான் ஆக வேண்டும் இந்த தீபாவளியை…

வாங்கும் சம்பளம் வறட்சி நிலைக்கும் கீழிருக்க…

வயதாகி போனதினால் தேவைகளும் அதிகரிக்க…


அடிக்கடி பண்டிகைகள் அடங்காமல் அலைக்கழிக்க…


புத்தாடை பட்டாசு வனப்பில் ஊர் மகிழ்ந்திருக்க…


சுற்றுவட்டாரம் சுகங்களில் குதூகலிக்க…




எங்கேயாவது கெஞ்சிக் கூத்தாடி

கடன் வாங்கியாவது கொண்டாடித்தான் ஆக வேண்டும்
இந்த தீபாவளியை…

என் பிள்ளைகளுக்காக…